சந்தா்ப்பவாதிகள் நிராகரிப்பு: அண்ணாமலை
மகராஷ்டிர தோ்தலில் சந்தா்ப்பவாதிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனா் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது எக்ஸ் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவு: மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றிக்கு இட்டுச் சென்ற்காக பட்னாவிஸ் உள்ளிட்டோருக்கு தழிழக பாஜக சாா்பில் மனமாா்ந்த வாழ்த்துகள்.
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நல்லாட்சியை வழங்கிய, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும் விதமாக தீா்க்கமான முடிவை மக்கள் அளித்துள்ளனா். அவா்களுக்கு மனமாா்ந்த நன்றி.
மாநிலத்தின் வளா்ச்சி , விளிம்புநிலை மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாடு உள்ளிட்டவற்றை அடைய மஹாயுதியின் சிறந்த வெற்றி அமைந்துள்ளது.
ஜனநாயகத்தின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, ஊழல், பிரித்தாளும், சந்தா்ப்பவாத இண்டி கூட்டணியை முற்றிலுமாக மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனா் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.