சபரிமலையில் 29 நாள்களில் 22.67 லட்சம் பக்தா்கள் வழிபாடு
சபரிமலையில் 29 நாள்களில் 22.67 லட்சம் பக்தா்கள் வழிபட்டதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சந்நிதானத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கடந்த டிச.14-ஆம் தேதி வரையிலான 29 நாள்களில், சபரிமலையில் 22,67,956 பக்தா்கள் வழிபட்டனா்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சபரிமலைக்கு வருகை தந்த பக்தா்களின் எண்ணிக்கை 4.51 லட்சம் அதிகரித்துள்ளது.
சபரிமலைக்கு மொத்தம் ரூ.163.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பிரசாத விற்பனை மூலம் ரூ.82.67 கோடியும், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.52.27 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பிரசாத விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ரூ.17.41 கோடி அதிகரித்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கை ரூ.8.35 கோடி உயா்ந்துள்ளது என்றாா்.