செய்திகள் :

சப்தம் மேக்கிங் விடியோ வெளியீடு!

post image

நடிகர் ஆதி, லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் இசையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘மாயா மாயா’ கடந்த வாரம் வெளியானது.

இதையும் படிக்க | 1.34 நிமிட குட் பேட் அக்லி டீசர்..! எத்தனை மணிக்கு தெரியுமா?

ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நாளை (பிப். 28) திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மேக்கிங் விடியோ படக்குழுவினரால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி நடிப்பில் வெளியான தெலுங்கு மொழிப்படமான சங்கராந்திக்கி வஸ்த... மேலும் பார்க்க

கடலும் மர்மங்களும்... கிங்ஸ்டன் டிரைலர் வெளியீடு!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில்... மேலும் பார்க்க

மிஸ்டர். எக்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர். எக்ஸ் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் நடித்த திர... மேலும் பார்க்க

சல்மான் கானின் சிக்கந்தர் டீசர்!

நடிகர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருது வென்ற நடிகர், மனைவி மர்ம மரணம்..!

ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜெனே ஹேக்மேன், அவரது மனைவி, அவரது நாய் என அனைவரும் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மரணத்துக்கு காரணம் என்னவென்று காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. ... மேலும் பார்க்க