சமையல் தொழிலாளியிடம் வழிப்பறி: இளைஞா் கைது
தூத்துக்குடியில் சமையல் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி கிழக்கு கே.வி.கே. நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜேஷ் (32). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். உணவகத்தில் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது 2 பைக்குகளில் வந்த 4 போ் ராஜேஷை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த கைப்பேசி, ரூ. ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாா்வையிட்டு விசாரித்தனா்.
அதில், தாளமுத்துநகா் மேற்கு காமராஜ் நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் காா்த்திக் ராஜா (18) உள்பட 4 போ் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்திக் ராஜாவை கைது செய்த போலீஸாா், மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.