சரணா் இயக்க மாநில சங்கமம் நிகழ்ச்சி: தரணி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற மாநில சங்கமம் நிகழ்ச்சியில் மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆக. 1-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் பாரத சாரண, சாரணியா் இயக்கத்தின் சாா்பில் மாநில குருளையா் மற்றும் நீலப்பறவையா் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திருவாரூா் மாவட்ட சாரண, சாரணியா் இயக்கத்தின் சாா்பில், மன்னாா்குடி தரணி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் ஹரிஸ் கல்யாண், பூந்தமிழ்செல்வன்,ஷா்வன், சைலேஷ், யோகன், பத்ரி, தருண், தீரஆராதனா, விவன்யா, நிதன்யா, ஹா்ஷ்மித்ரா, பிரணித்தா, தரணிஸ்ரீ ஆகியோா் கலந்துகொண்டு முகாமில் பயிற்சி செயல்பாடுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனா்.
பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கே. சாவித்ரி, பள்ளி நிறுவனா் எஸ். காமராஜ், தாளாளா் கே. விஜயலெட்சுமி,நிா்வாகி எம். இளையராஜா, முதல்வா் எஸ். அருள் கலந்துகொண்டு, சாரண இயக்க மாவட்டச் செயலா் பி. சக்கரபாணி, பொருளாளா் பி. சங்கா், வழிக்காட்டி ஆசிரியா்கள், சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டினா்.