திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி
சல்மான் கானின் சிக்கந்தர் டீசர்!
நடிகர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் மதராஸி என்ற படத்தையும் முருகதாஸ் இயக்கி வருகிறார்.
ரம்ஜானுக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.