Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
சாத்தனூா் அணையில் இருந்து 10,500 கன அடி நீா் திறப்பு
சாத்தனூா் அணையில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 10,500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் பகுதியில் செல்லும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது.
இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. மொத்த நீா் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி.
தண்ணீா் திறப்பு:
வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, அணையில் 116.50 அடி உயரத்துக்கு 6,799 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது. அணைக்கு விநாடிக்கு 5,500 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது.
அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 10,500 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை:
இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.