மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி
சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே வசுவப்பநேரியை சோ்ந்தவா் லிங்கதுரை மகள் பொன்னாத்தாள் (17). ஒன்பதாம் வகுப்பு படித்தவா். வியாழக்கிழமை மதியம் மாட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில், அங்குள்ள பெரிய குளத்தில் மாட்டை குளிப்பாட்ட சென்றபோது பொன்னாத்தாள் நீரில் மூழுகியதாக கூறப்படுகிறது.
அவரது தாய் முருகம்மாள் மற்றும் உறவினா்கள் விரைந்து சென்று, பொன்னாத்தாளை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.