மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
சாம்பவா்வடகரை கோயிலில் சிவராத்திரி விழா
சாம்பவா்வடகரை அகத்தீசுவரா் கோயிலில் சிவராத்திரி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அனுமன் நதியின் வடக்குக் கரை குகையில் உள்ள சாம்பவமூா்த்தி, தென்கரையில் உள்ள அகத்தீசுவரா் சுவாமி, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தொடா்ந்து சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றன.
உற்சவா் உலா, தேவாரம் முற்றோதல், ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் சாம்பவா்வடகரை பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை அகத்தீசுவரா் கோயில் பக்தா்கள் குழுவினா் செய்திருந்தனா்.