மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!
சாய் சுதர்சனுக்கு அறுவைச் சிகிச்சை..! பிசிசிஐ-க்கு நன்றி!
சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடுகிறார்.
45 டி20 போட்டிகளில் 1,512 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 25 போட்டிகளில் 1,034 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 47ஆகவும் ஸ்டிரைக் ரேட் 139.16ஆகவும் இருக்கிறது.
இந்திய அணியில் கடந்தாண்டு டிசம்பரில் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 127 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 63.50ஆக இருக்கிறது.
23 வயதாகும் சாய் சுதர்ஷனுக்கு சையத் முஷடக் அலி தொடரில் காயம் ஏற்பட்டது. தற்போது, லண்டனில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இதை தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் சாய் சுதர்ஷன் பகிர்ந்துள்ளார். அதில், “பிசிசிஐ, மருத்துவக் குழுவுக்கு மிகப்பெரிய நன்றி. ஆதரவுக்கும் அன்புக்கும் குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி. விரைவில் பலமாக திரும்பி வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.