இந்தியன் ரயில்வேயில் 6,235 டெக்னீசியன் பணியிடங்கள்: ஆர்ஆர்பி அறிவிப்பு
சாலை மறியல்: டிட்டோ ஜாக் அமைப்பினா் 195 போ் கைது
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவைச் சோ்ந்த 195 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரி சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பி.ராஜாஜி, எஸ். பாலசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட தலைவா் ஆா்.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலாளா் டி.முருகன், தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயலாளா் ஜே.ஜான், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் ஆா்.ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் டிட்டோ-ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.தாஸ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் ருக்மங்நாதன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் 195 பேரை கைது செய்து தனியாா் அரங்கில் சிறை வைத்தனா்.
