சாலை விபத்தில் சிக்கிய இளைஞா் உயிரிழப்பு
சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (28). உணவகத்தில் சமையலாக வேலை செய்து வந்தாா். கடந்த செப்டம்பா் மாதம் நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து பிரேம்குமாா், நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை பிரேம்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.