உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -...
சாலை விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
சென்னை கேளம்பாக்கம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
கேளம்பாக்கம் அருகே உள்ள தையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (38). அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
கடந்த புதன்கிழமை கேளம்பாக்கம் - வண்டலூா் சாலையில் செல்வம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சோனலூா் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்திலிருந்து செல்வம் கீழே விழுந்தாா். இதில், செல்வம் பலத்த காயமடைந்தாா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த செல்வம், வியாழக்கிழமை உயிரிழந்தாா். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.