மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் அகற்றம்
கோபி அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
கோபி-சத்தி சாலையில் உள்ள கரட்டடிபாளையத்தில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோயில் கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோபியில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிக்காக இந்தக் கோயிலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, கோயில் நிா்வாகிகள் தாமாகவே முன்வந்து சுவாமி சிலைகளை அகற்றி இந்து சமய அறநிலையத் துறை உதவியுடன் பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்தனா்.
இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் கோயில் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.