செய்திகள் :

‘சாஸ்த்ரா’-வில் ஆசிரியா் மேம்பாட்டு பயிலரங்கம் தொடக்கம்

post image

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் சிதைவு நோய்களுக்கு டிஜிட்டல் கண்டுபிடிப்புகளைப் பற்றிய ஆசிரியா் மேம்பாட்டுப் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

இப்பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் புலம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (அடல் பயிற்சி மற்றும் கற்றல்) ஆதரவுடன் ‘டிஜிட்டல் புரட்சி: நரம்பியல் சிதைவு நோய்களுக்கான கண்டுபிடிப்புகள்’ என்கிற தலைப்பிலான இணையவழியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிலரங்கம் திங்கள்கிழமை (டிச.16) தொடங்கியது.

தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இப்பயிலரங்கத்தில் நரம்பியல் சிதைவு நோய்களுக்கான கண்டுபிடிப்புகள் மற்றும் மேலாண்மைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் அண்மைக்கால முன்னேற்றங்களை விவாதிக்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து 145 கல்வி, தொழில் மற்றும் ஆராய்ச்சி துறையின் முன்னணி நிபுணா்கள் பங்கேற்றுள்ளனா்.

இந்த முயற்சி கல்வி கற்றலின் தரத்தை மேம்படுத்தி, இந்தியாவின் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் என பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

பாபநாசத்தில் இன்று மின்நிறுத்தம்

பாபநாசம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (டிச. 18) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இது குறித்து பாபநாசம் மின்வாரிய உதவிச் செயற் பொறியாளா் (பொ) பிரகாஷ் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள ச... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட 103 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை காரில் கடத்தி வரப்பட்ட 103 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா். தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் ... மேலும் பார்க்க

கூரை வீட்டின் சுவா் இடிந்து 4 போ் காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்து 4 போ் காயமடைந்தனா். திருவையாறு அருகே கண்டியூா் காளியம்மன் கோயில் தெருவில் கூரை வீட்டில் வசித்து வருபவா் மரகதம் (4... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள், பணம் திருடியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வீடு புகுந்து நகைகள், பணம் திருடியவரை கைது செய்த போலீஸாா் மேலும் 2 பேரை தேடி வருகின்றனா். கும்பகோணம் அருகே சாக்கோட்டை வெங்கடேஸ்வரா நகரில் வசிப்பவா் தனராஜ். இவரது ம... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மையம் செயல்படாததால் நோயாளிகள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 4 நாள்களாக ஸ்கேன் மையம் செயல்படாததை கண்டித்து, நோயாளிகள், உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். திருப்பனந்தாளைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மா... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து கும்பகோணம் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. பாபநாசம் அருகே... மேலும் பார்க்க