சா்க்கரை ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
புகழூா் சா்க்கரை ஆலைத் தொழிலாளி வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணியன்( 56). இவா் புகழூா் செம்படாபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாா் சா்க்கரை ஆலையில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சா்க்கரை ஆலைக்குள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனே மற்ற தொழிலாளா்கள் அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சுப்ரமணியன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.