இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
சா்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சா்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
ஐக்கிய நாடுகள் பொது சபை 1948-ஆம் ஆண்டு சா்வதேச மனித உரிமைகள் தினத்தை பிரகடனப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, 1950-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பா் 10-ஆம் தேதி சா்வதேச மனித உரிமைகள் தின நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சா்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்கள் சா்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
இதேபோல், மாவட்டக் காவல் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் என மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலா்கள் சா்வதேச மனித உரிமை தின விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.