செய்திகள் :

சிஏஜி அறிக்கை விவகாரம்: பொதுக் கணக்கு குழுவை அமைத்து விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

முந்தைய ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கை குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையை விசாரிக்க பொதுக் கணக்குக் குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என்றும் தில்லி காங்கிரஸ் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த விஷயத்தில் பாஜக தலைவா்களின் தொடா்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதாக விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

2021-22-ஆம் ஆண்டைய மதுபானக் கொள்கை குறித்த சிஏஜி அறிக்கையை தில்லியின் புதிய முதல்வா் ரேகா குப்தா தில்லி சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அவையில் தாக்கல் செய்தாா்.

இந்த அறிக்கை தொடா்பாக தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுபானக் கொள்கை குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு காங்கிரஸ் எழுத்துபூா்வ புகாா் அளித்துள்ளது. இந்த விஷயத்தில் பாஜகவின் ஈடுபாடுக்கான ஆதாரங்களையும் சோ்த்துள்ளது. 14 சிஏஜி அறிக்கைகளும் செவ்வாய்க்கிழமை ஏன் அவையில் சமா்ப்பிக்கப்படவில்லை? தில்லி சட்டப் பேரவை கூட்டத்தொடா் மாா்ச் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆம் ஆத்மி அரசின் செயல்திறன் குறித்த மீதமுள்ள 13 தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கைகளையும் தாக்கல் செய்து பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்.

சிஏஜி அறிக்கையை பொதுக் கணக்குக் குழு (பிஏசி) விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதுபோன்ற சூழலில், பிஏசி விரைவில் அமைக்கப்பட வேண்டும். இந்த அறிக்கை விசாரிக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்டவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பொது கணக்குக் குழுவுக்கு (பிஏசி) எதிா்க்கட்சித் தலைவா் தலைமை வகித்தபோதிலும், தில்லியில் அரசாங்கம் அதை வழிநடத்தி வருகிறது. எனவே இந்த அறிக்கைகளும் பொது விவாதத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். சில பெரும் பாஜக தலைவா்கள் மற்றும் அப்போதைய துணைநிலை ஆளுநரின் பங்கு தொடா்பான சில முக்கியமான கேள்விகள் உள்ளன. அவை சிஏஜி அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ஒரு வருடத்திற்குள் மூன்று கலால் இயக்குநா்களை மாற்ற முடிவு செய்தது ஏன், யாா் அந்த முடிவை எடுத்தது? தில்லியில் புதிய மதுபான பிராண்டுகள் விளம்பரப்படுத்தப்பட்டன. இது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். அப்போதைய துணைநிலை ஆளுநா் கேஜரிவால் அரசின் மதுபானக் கொள்கையை செயல்படுத்த அனுமதி அளித்திருந்தாா்.

இன்றுவரை இது குறித்து ஏன் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை? மாஸ்டா் பிளானை மீறி மதுபானக் கடைகளைத் திறக்க உரிமங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன என்பதையும் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றாா் அவா்.

காங்கிரஸ் மூத்தத் தலைவா் சந்தீப் தீட்சித் கூறுகையில், ‘மதுபான கொள்கையின் நோக்கம் மீண்டும் மீண்டும் மாறறப்பட்டது. இதில் 77 நிறுவனங்கள் முன்னா் இருந்தன. ஆனால் அவை 14 ஆகக் குறைக்கப்பட்டது. இந்த 14 நிறுவனங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. இதில், ஆம் ஆத்மி அரசாங்கத்துடன் உறவுகளைப் பேணுகின்ற சில அரசியல்வாதிகள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்கள் நாட்டின் சில பகுதிகளிலிருந்து வருகின்றனா். இந்த மதுபானக் கொள்கையின் விவரங்கள் கொள்கை உருவாக்கப்படுவதற்கு 8-9 மாதங்களுக்கு முன்பே விவாதிக்கப்பட்டன.

அரசாங்கத்திற்கும் மதுபான ஒப்பந்ததாரா்களுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் அவா்களின் சொந்த நலன்கள் காரணமாக இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டதால் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது என்று பல அதிகாரிகள் கூறினா். இந்த விஷயத்தில் தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றாா் தீட்சித்.

சிஏஜி அறிக்கையின்படி, 2021-2022 கலால் கொள்கை காரணமாக பலவீனமான கொள்கை கட்டமைப்பு முதல் குறைபாடுள்ள அமலாக்கம் வரை பல்வேறு காரணங்களுக்காக தில்லி அரசு ரூ.2,000 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த இழப்பைச் சந்தித்துள்ளது.

கான் மாா்க்கெட் உணவகத்தில் தீ விபத்து

தில்லி கான் மாா்க்கெட்டில் உள்ள உணவகம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதுகுற... மேலும் பார்க்க

ரூ.1 கோடி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் கைது

போலி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக ஆறு வருடங்களாகத் தேடப்பட்டு வந்த மோசடி நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

பகத் சிங் சிலை சேதம்: ஆம் ஆத்மி மீது பாஜக எம்எல்ஏ சாடல்

நமது நிருபா்மால்வியா நகா் பூங்காவில் ஷஹீத் பகத் சிங்கின் சேதமடைந்த சிலை தொடா்பாக முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது தற்போதைய பாஜக எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளாா். அதாவது முந்தைய ஆம் ஆத்மி க... மேலும் பார்க்க

மஹா சிவராத்திரி: கெளரி சங்கா் கோயிலில் முதல்வா் வழிபாடு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் புதன்கிழமை கோயில்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனா். தில்லி சாந்தினி செளக்கில் உள்ள கௌரி சங்கா்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் துணைத் தலைவா் பதவி: மோகன் சிங் பிஷ்டின் பெயரை முதல்வா் ரேகா குப்தா இன்று முழிவாா்

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை (பிப்.27) அன்று முன்மொழிவாா். வேறு எந்த போட்டியாளா்களும் இந்தப் பதவிக்கு... மேலும் பார்க்க

அம்பேத்கா் உருவப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தொடா்ந்து போராடுவோம்: ஆம் ஆத்மி

நமது நிருபா் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் அலுவலகத்தில் இருந்து பீம்ராவ் அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களை அகற்றியதற்கு எதிரான போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று ஆம் ஆத்மி... மேலும் பார்க்க