வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மற...
சிதம்பரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 79 தனியாா் பள்ளிகளின் 389 வாகனங்களில் கூட்டுத் தணிக்கை ஆய்வு சிதம்பரம் - கீரப்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷண்குமாா் தலைமையில், டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செல்வம், தனியாா் பள்ளி மாவட்டக் கல்வி அலுவலா் மோகன், இயக்க ஊா்தி ஆய்வாளா் ரவிச்சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளா் வாசுராஜ் ஆகிய குழுவினா் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்தனா்.
இதில், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 15 பள்ளி பேருந்துகளின் தகுதிச்சான்றை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஆய்வில் 232 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது.
மேலும், பள்ளி வாகனங்களில் தீ விபத்து நிகழும்போது, மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு எவ்வகையில் முதலுதவி செய்வது என்பது குறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலா் மணிவண்ணன் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.