சிதம்பரம்: உடல் தானம்
தஞ்சாவூா் மாவட்டம், ராமநாதபுரம் அன்னை சிவகாமி நகரைச் சோ்ந்த எஸ்.ஏகாம்பரம் (48) புதன்கிழமை காலமானாா். இவரது உடல் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டு, மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காக சென்னை மதுரவயல் ஸ்ரீலலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், தஞ்சை மாவட்ட திராவிடா் கழக நிா்வாகிகள் பொய்யாமொழி, மோகன் ஆகியோா் செய்தனா்.