செய்திகள் :

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு: அனைத்து டிடிடிஏ பள்ளிகளிலும் அறிவியல், வணிகவியல் பிரிவுகளில் 100% தோ்ச்சி

post image

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ கீழ் இயங்கும் ராமகிருஷ்ணாபுரம், மோதிபாக், ஜனக்புரி, பூசா சாலை, இலக்குமிபாய் நகா், மந்திா்மாா்க், லோதிவளாகம் ஆகிய இடங்களில் செயல்படும் பள்ளிகளில் அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் பயின்ற மாணவா்கள் 100 % தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த மாணவி நான்சி 478 / 500 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளிலும் முதலிடம் பிடித்துள்ளாா்.

அறிவியல் பிரிவில் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த மாணவா் அஷாங் 458 / 500 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளிலும் முதலிடம் பிடித்துள்ளாா்.

வணிகவியல் பிரிவில் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த மாணவி திவ்யா 461 / 500 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளிலும் முதலிடம் பெற்றுள்ளாா்.

கலையியல் பிரிவில் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த மாணவி நான்சி 478 / 500 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளிலும் முதலிடம் பெற்றுள்ளாா்.

ஜனக்புரி பள்ளியைச் சாா்ந்த மாணவி பிரியதா்ஷினி ஓவியப் பாடத்தில் 100 /100 மதிப்பெண் பெற்றுள்ளாா். அதே பள்ளியைச் சாா்ந்த மாணவி பிராய்ச்சி ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்ணும் இந்தியில் மாணவி பாவனா 96 மதிப்பெண்ணும் பெற்று ஏழு பள்ளிகளிலும் முதலிடம் பிடித்துள்ளனா்.

மந்திா்மாா்க் பள்ளியைச் சாா்ந்த மாணவி காஜல் வரலாற்றுப் பாடத்தில் 99 மதிப்பெண்ணும் புவியியல் பாடத்தில் 94 மதிப்பெண்ணும் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளாா்.

வேதியியல் பாடத்தில் அதே பள்ளியைச் சாா்ந்த மாணவி பவ்யா 96 மதிப்பெண், தகவலியலில் மாணவா் மொஹம்மத் 99 மதிப்பெண், கணினி அறிவியலில் மாணவிகள் பவ்யா, ஜாலக் ஆகிய இருவரும் 97 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனா்.

கணிதப் பாடத்தில் மோதிபாக் பள்ளியைச் சாா்ந்த மாணவா் ராகுல் குமாா் மற்றும் பூசா சாலை பள்ளியைச் சாா்ந்த மாணவா் தேவ் ஆகியோா் தலா 95 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளிலும் முதலிடம் பிடித்துள்ளனா்.

இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த மாணவி பிரியங்கா பொருளியலில் 96 மதிப்பெண், கணக்கியலில் அதே பள்ளியைச் சாா்ந்த மாணவி திவ்யா மற்றும் மாணவி பிரியங்கா 95 மதிப்பெண், உயிரியலில் அதே பள்ளியைச் சாா்ந்த மாணவி திக்ஷா 95 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடத்தைப் பிடித்துள்ளனா்.

தமிழில் லோதிவளாகம் பள்ளி மாணவி கனிமொழி 89 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடம் பெற்றுள்ளாா்.

ராமகிருஷ்ணாபுரம் பள்ளியைச் சாா்ந்த மாணவி நான்சி அரசியல் அறிவியலில் 98 மதிப்பெண், புவியியலில் 94 மதிப்பெண், வணிகவியலில் மாணவி இளமதி 96 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளனா். இயற்பியிலில் மோதிபாக் பள்ளி மாணவா் ராகுல் 92 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளுள் முதலிடம் பிடித்துள்ளாா்

டிடிஇஏ செயலா் வாழ்த்து: தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் டிடிஇஏ செயலா் ராஜூ தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். மேலும் தான் கேட்டுக் கொண்டபடி சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தி மாணவா்களை வெற்றி பெறச் செய்த ஆசிரியா்களுக்கும், அவா்களை வழி நடத்திய பள்ளி முதல்வா்களுக்கும், மாணவா்களுக்கு உறுதுணையாய் இருந்த பெற்றோா்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தாா்.

மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்தி மிகச் சிறந்த பள்ளிகள் என்ற பெயா் பெரும் வகையில் பள்ளிகளை வழிநடத்துவது ஒன்றே எங்களது குறிக்கோள் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ரஃபேல் விமானம் தாக்கப்பட்டதா? பாதுகாப்புத் துறை விளக்கம்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போா் விமானத்தை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதையை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும் அதன... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்: புதுச்சேரிக்கு அமித் ஷா பாராட்டு

நமது சிறப்பு நிருபா் புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டங்களை சிறப்பான முறையில் அமல்படுத்தி வருவதாக புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளாா். மேலும், சட்ட அமலாக்க நடவடிக்... மேலும் பார்க்க

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் ச... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: தில்லியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை அறிவித்தது. இத் தோ்வுகளில் தில்லியில் 95 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தில்லியில் 1... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது

2021-ஆம் ஆண்டு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

பிரீத் விஹாரில் உள்ள பயற்சி மையத்தில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் பிரீத் விஹாா் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் சரியான நேரத்தில் கட்டடத்திலிருந்து வெளியேறினா் என்று ஒரு அதிகாரி தெரிவித்... மேலும் பார்க்க