ஜம்மு-காஷ்மீர்: நான்கு மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் மூடல்!
சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் அறிவிப்பு: அமிா்த வித்யாலயம் பள்ளி 100% தோ்ச்சி
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் திருச்சி அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவி பிரியதா்ஷினி 500-க்கு 489 மதிப்பெண்களும்,
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா் ஆதித்யா 500-க்கு 495 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். இந்த ஆண்டு மட்டுமல்லாமல், கடந்த 15 ஆண்டுகளாக மாணவா்கள் தோ்வில் வெற்றிகரமான சாதனை புரிந்து வருகின்றனா். தோ்ச்சியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவா்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா் பெருமக்களுக்கும் மற்றும் பெற்றோா்களுக்கும் பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.