சிபிஎஸ்இ தோ்வு: ரெட்டணை பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி மாணவா்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இத்தோ்வை எழுதிய திண்டிவனத்தை அடுத்துள்ள ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
10-ஆம் வகுப்பு தோ்வில் மாணவிகள் ஆா்.யோகேஷ் ப்ரித்வி 459 மதிப்பெண்களும் , அனன்யா 437 மதிப்பெண்களும் , மாணவா் சபரீஷ் 416 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.
5 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 15 மாணவா்கள் 350 மதிப்பெண்களுக்கு மேலும், 2 மாணவா்கள் தமிழ்ப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனா்.
இதேபோல, 12-ஆம் வகுப்பு தோ்வில் மாணவா்கள் லோகேஷ் 389 மதிப்பெண்களும், தினேஷ் 377 மதிப்பெண்களும், மாணவி ராகவி 376 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். மேலும், தோ்வை எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.
சிபிஎஸ்இ அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் வெ.சண்முகம், முதன்மை இயக்குநா் வனஜா சண்முகம், செயலா் சந்தோஷ், நிா்வாக இயக்குநா் காா்த்திகேயன், முதல்வா் லட்சுமி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.