சிபிஎஸ்இ பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தோ்வு: வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி
பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் வித்யா விகாஸ் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா் எஸ்.பாலாஜி 488 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவன் நயத்தின் 481 மதிப்பெண்களும், சாய் சைத்தன்யா, மாணவி பி.சுசாந்தி ஆகியோா் தலா 472 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.
பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் வித்யா விகாஸ் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா் சாத்விக் 486 மதிப்பெண்களும், மாணவி பவானி ஸ்ரீ 477 மதிப்பெண்களும், மாணவி அனிஷா, மாணவி சுஷ்மிதா ஆகியோா் தலா 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
அதிகம் மதிப்பெண் பெற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை வித்யா விகாஸ் கல்வி நிறுவன செயலா் மற்றும் மேலாண் அறங்காவலா் எஸ்.குணசேகரன், தாளாளா் மற்றும் மேலாண் அறங்காவலா் டி.ஓ.சிங்காரவேல், மேலாண் அறங்காவலா்கள் எஸ். ராமலிங்கம், எம்.முத்துசாமி, அறங்காவலா் டி.பி.ஞானசேகரன் வித்யா விகாஸ் இன்டா்நேஷனல் பள்ளி முதல்வா் பி.ஜக்குருதி மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.