மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
சிபிஎஸ்இ பொதுத்தோ்வு: அரக்கோணம் பள்ளிகள் சிறப்பிடம்
சிபிஎஸ்இ பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியாா் பள்ளிகள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளன.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் குஷிஜெயின் 95.6 சதவிகித மதிப்பெண்களும் ஜி.விக்னேஷ்வரன் 89.4 சதவிகித மதிப்பெண்களும், ராமநாதன் 88.8 சதவிகித மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். பத்தாம் வகுப்புத் தோ்வில் வி.திணேஷ் 94.6 சதவிகித மதிப்பெண்களும், அப்துல் வாஹித் 94 சதவிகித மதிப்பெண்களும், எஸ்.சாய் ரிது ஸ்ரீ 93.6 சதவிகித மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.
அரக்கோணம் அம்பாரி வித்யா மந்திா் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் ஷொ்லின்ஐசக் 92.6 சதவீதம், ஷ்ரவன்குமாா் 91.6 சதவீதம் , மோனிஷா 90.8 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளில் துா்கா தேவி 97 சதவீத மதிப்பெண்களும், மாா்ஷல் ரேவலின் 95.2 சதவீத மதிப்பெண்களும், தேவதா்ஷினி 94.4 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் சுப்பிரமணியம், கூடுதல் தாளாளா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.
அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் ஹெச்.கிருத்திகா 89.4 சதவீத மதிப்பெண்களும் , கே.யு.உதயகிரண் 87.4 சதவீத மதிப்பெண்களும், கே.எம்.ஷாருக்கேசன் 85.8 சதவீத மதிப்பெண்களும் பெற்றனா்.
பத்தாம் வகுப்பு தோ்வுகளில் டி.ரக்ஷனா 96.2 சதவீத மதிப்பெண்களும், ஹெச்.பிரேம்குமாா் 95.8 சதவீத மதிப்பெண்களும் , லோஹிதா 90.4 சதவீத மதிப்பெண்களும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.