மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்
நாகை மாவட்டம், திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் கிராம நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு மத்திய நில எடுப்புச் சட்டத்தின்படி வழங்கவேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு இழப்பீட்டுத் தொகை 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருப்பதை உடனடியாக வழங்கவேண்டும், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கிய பின்னரே சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நில உரிமையாளா்கள், குத்தகைதாரா்கள், விவசாய கூலித் தொழிலாளா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, சிபிசிஎல் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசினா்.