செய்திகள் :

சிரியா - இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் ஏற்பு! அமெரிக்கா அறிவிப்பு!

post image

சிரியா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர, இருநாட்டு தலைவர்களும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

சிரியாவில் துரூஸ் இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவுக்கும், பொதூயின் ஆயுதக்குழுவுக்கும் இடையில், ஸ்வேடா மாகாணத்தில் நடைபெற்ற மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டின் இடைக்கால அரசின் ராணுவப் படைகள் தலையிட்டது.

இதனைத் தொடர்ந்து, துரூஸ் ஆயுதக்குழுவுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் மோதல் துவங்கிய நிலையில், துரூஸ் படைக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல்-ஷரா ஆகியோர் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக, துருக்கி நாட்டின் அமெரிக்க தூதர் டாம் பராக் கூறியுள்ளார். இந்த போர்நிறுத்தம் கொண்டு வர துருக்கி மற்றும் ஜோர்டான் அரசுகளும் தலையிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் டாம் பராக் வெளியிட்ட பதிவில், “நாங்கள் துரூஸ், பெதூயின் மற்றும் சன்னி பிரிவினரை உடனடியாக அவர்களது மோதல்களை முடித்துக்கொண்டு, அமைதியை நிலைநாட்ட வலியுறுத்துகின்றோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, துரூஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக, ஜூலை 16 ஆம் தேதி சிரியாவின் தலைநகரில் உள்ள ராணுவ தலைமையகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டடங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியா - பாக். மோதலில் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் டிரம்ப்!

The US government has announced that the leaders of the two countries have agreed to a ceasefire to end Israel's attacks on Syria.

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேர் சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்க... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வழிப் பாதைகள் 2 நாள்களுக்கு மூடல்!

பாகிஸ்தான் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வான்வழிப் பாதைகள் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் விமான நிலைய ஆணையம், அந்நாட்டின், சில தேர்ந்தெடுக்கப்ப... மேலும் பார்க்க

அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால்: எலான் மஸ்க்

அரசியல் மற்றும் அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருந்ததால் வேறு வழியே இல்லாமல், எனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என்று டெஸ்லா நிறு... மேலும் பார்க்க

நைஜர்: பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 இந்தியர்கள் பலி! ஒருவர் கடத்தல்!

நைஜர் நாட்டின் தென்மேற்குப் பகுதியில், 2 இந்தியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுடன், ஒருவரை கடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.நைஜரின் தொஸ்ஸோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி,... மேலும் பார்க்க

இஸ்ரேல் தலைநகரில் ஏவுகணைத் தாக்குதல்: யேமனின் ஹவுதிகள் பொறுப்பேற்பு!

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவவில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றுள்ளது. டெல் அவிவில் உள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின்... மேலும் பார்க்க

அமெரிக்கா: காவலர் பயிற்சி மையத்தில் வெடி விபத்து! 3 அதிகாரிகள் பலி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள காவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வெடி விபத்தில், 3 அதிகாரிகள் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. கலிஃபோர்னியாவின், லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்திலுள்ள காவலர் பயிற்சி மை... மேலும் பார்க்க