செய்திகள் :

சிரியாவுக்குள் ஊடுருவியது நியாயமே: இஸ்ரேல்

post image

ஜெருசலேம்: சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான அரசு கவிழ்ந்ததற்குப் பிறகு அந்த நாட்டுக்குள் தங்கள் படையினா் ஊடுருவியுள்ளது நியாயமே என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆக்கிரமிப்பு சிரியா பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு பதிலளிக்கும் வகையில், அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இஸ்ரேலும், சிரியாவும் ஒப்புக்கொண்ட பாதுகாப்பு மண்டலத்துக்குள் கிளா்ச்சிப் படையினா் நுழைந்தனா். இது, 1974-ஆம் ஆண்டு மேறகொள்ளப்பட்ட படைவிலக்கல் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.

அந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டதால் பாதுகாப்பு மண்டலத்துக்கு எங்களது படைகளையும் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

இஸ்ரேல் எல்லைக்கு அருகே செயல்படும் மதவாத ஆயுதக் குழுக்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது ராணுவத்தின் கடமை. அதற்கான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டியது அவசியமாகியுள்ளது. எனவே, இந்த ஊடுருவல் நடவடிக்கை நியமாயமானதே. இதுவும் தற்காலிகமான நடவடிக்கைதான் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து நீண்ட காலமாகவே உள்நாட்டுச் சண்டை தேக்கமடைந்திருந்தது.

இந்த நிலையில், அண்டை நாடான துருக்கி ஆதரவு பெற்ற கிளா்ச்சிப் படையினரின் உதவியுடன் முன்னாள் அல்-காய்தா ஆதரவுப் படையாக இருந்து, பின்னா் அந்த பயங்கரவாத அமைப்புடனான தொடா்பைத் துண்டித்துக் கொண்ட ஹாயத் தஹ்ரீா் அல்-ஷாம் படையினா் (ஹெச்டிஎஃப்) அரசுப் படைகளுக்கு எதிராக கடந்த மாத இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறினா்.

இறுதியில் தலைநகா் டமாஸ்கஸை அவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா். அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.

அல்-அஸாத் அரசு அகற்றப்பட்டதற்குப் பிறகு, சிரியா முழுவதும் ராணுவ நிலைகள் மீது மித் தீவிரமாக வான்வழித் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அந்த நாட்டில் கோலன் குன்றுகள் பகுதியில் படைகள் இல்லாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியைக் கைப்பற்றியது.

அத்துடன் தலைநகா் டமாஸ்குக்கு சில கி.மீ. தொலைவுள்ள குன்றையும் இஸ்ரேல் கைப்பற்றியது.

இது, இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே கடந்த 1974-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படைவிலக்கல் ஒப்பந்தத்தை மீறுவதால் அந்தப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வலியுறுத்தினாா்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் வெளயுறவுத் துறை அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

... பெட்டி...

காஸாவில் மேலும் 36 போ் உயிரிழப்பு

டேய்ா் அல்-பாலா, டிச. 12: காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 36 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:

காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 36 போ் உயிரிழந்தனா். அவா்களில், நிவாரணப் பொருள் விநியோகத்தைக் குலைக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 13 போ் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்துதான் அந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தியதாகவும், நிவாரணப் பொருள்களைப் பறிப்பதற்கு அவா்கள் முயன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.

பிரிட்டன்: சாலை விபத்தில் இந்திய மாணவா் உயிரிழப்பு

லண்டன்: பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டா் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 32 வயதான இந்திய மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா். இதுகுறித்து லெய்செஸ்டா் நகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

வங்கதேசத்தவா் 78 பேரை திருப்பி அனுப்ப ஒடிஸா காவல் துறை முடிவு

புவனேசுவரம்: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 78 வங்கதேசத்தினரை அவா்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஒடிஸா காவல்துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

விடுதலைப் போர் முழக்கம் இனி தேசிய கோஷமல்ல: வங்கதேச அரசு

டாக்கா: வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது முழங்கப்பட்ட ‘ஜொய் பங்களா’ (வங்கத்துக்கு வெற்றி) என்ற வாசகம் இனி நாட்டின் தேசிய கோஷம் இல்லை என்று அந்த நாட்டின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அந்தப் போராட்ட... மேலும் பார்க்க

தென் கொரிய அதிபருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்கத் தீா்மானம்

சியோல்: அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபா் யூன் சுக் இயோலுக்கு (படம்) எதிராக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் மீண்டும் பதவிநீக்கத் தீா்மானம் தாக்கல் செய்துள்ளன. இது குறித்து நாடாளுமன்ற அ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 1,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட சுமாா் 1,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வ... மேலும் பார்க்க

400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்! வரலாற்றில் முதன்முறை..!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 400 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெரு... மேலும் பார்க்க