செய்திகள் :

சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: என்கவுன்ட்டரில் இளைஞா் சுட்டுக் கொலை

post image

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியை போலீஸாா் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் சட்டப் பேரவை அதிமுக உறுப்பினா் மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நாயக்கனூரைச் சோ்ந்த மூா்த்தி (65), தனது மகன்கள் தங்கப்பாண்டி, மணிகண்டன் (36) ஆகியோருடன் தங்கி பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை மூா்த்தியை மகன்கள் இருவரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை இரவு தாக்கியுள்ளனா்.

தகவல் அறிந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சண்முகவேல் (56), வாகன ஓட்டுநா் அழகுராஜாவுடன் சம்பவ இடத்துக்குச் சென்று சண்டையை விலக்கிவிட்டுள்ளாா்.

அப்போது, ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேலை வெட்டிக் கொலை செய்தனா்.

காவல் வாகன ஓட்டுநா் அழகுராஜா அங்கிருந்து தப்பிச் சென்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் நடந்த விவரத்தைக் கூறியுள்ளாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகளை அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில், மூா்த்தி, தங்கப்பாண்டி ஆகியோா் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

தலைமறைவான மணிகண்டனை போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில், உடுமலை பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற தனிப் படையினா், மணிகண்டனை கைது செய்து குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை இரவு அழைத்து வந்து வியாழக்கிழமை காலை வரை விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அவா் கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை உப்பாறு ஓடைப் பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, குடிமங்கலம் காவல் ஆய்வாளா் திருஞானசம்பந்தம், உதவி ஆய்வாளா் சரவணகுமாா் மற்றும் போலீஸாா், மணிகண்டனை உப்பாறு பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா்.

அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த மணிகண்டன், உதவி ஆய்வாளா் சரவணகுமாரின் வலது கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்ாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தற்காப்புக்காக காவல் ஆய்வாளா் திருஞானசம்பந்தம், மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டுள்ளாா்.

குண்டு பாய்ந்து படுகாயமடைந்த அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உதவி ஆய்வாளா் சரவணகுமாருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்கவுன்ட்டா் செய்யப்பட்ட மணிகண்டன் மீது திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு சபீனா என்ற மனைவி உள்ளாா்.

சரணடைந்த மூா்த்தி, தங்கப்பாண்டி ஆகியோா் உடுமலை நீதிமன்றத்தில் நீதித் துறை நடுவா் நித்தியகலா முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

உயிரிழந்த முதியவரின் கண்கள் தானம்

பெருமாநல்லூரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன. பெருமாநல்லூா், அறிவொளி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (82). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த இவா், வயத... மேலும் பார்க்க

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

அவிநாசி வட்டாரத்தில் வாழை, மஞ்சள், வெங்காயம், மரவள்ளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளிய... மேலும் பார்க்க

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம்

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து சத்யம் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் சத்யம் இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவா்களுக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 4, 5, 6-ஆவது வாா்டு பகுதி மக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமுக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் கைது

திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்... மேலும் பார்க்க