செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆரம்பாக்கத்தில் அதிமுகவினர் மறியல் ஆர்ப்பாட்டம்!

post image

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை 8 நாளாகியும் கைது செய்ய தவறியதாகக் கூறி தமிழக அரசையும் காவல்துறையினரையும் கண்டித்து சனிக்கிழமை ஆரம்பாக்கத்தில் காவல் நிலையம் அருகே அதிமுகவினர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 12ஆம் தேதி பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த சிறுமியை மர்ம நபர் பின் தொடர்ந்து, அவரை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தப்பி ஓடினார். தொடர்ந்து, சிறுமி சென்னையில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

மறியல் ஆர்ப்பாட்டம்.

இந்த நிலையில், கடந்த எட்டு நாள்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் கைது செய்யப்படாததை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அதிமுக சார்பில் இன்று(ஜூலை 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெ.சுரேஷ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை மாவட்ட செயலாளர் டி.சி.மகேந்திரன், ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு ஏற்பாட்டில் ஆரம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக ஆர்ப்பாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மறறும் 200 அதிமுகவினர் உள்ளிட்ட 500 பேர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுமியம் பலராமன், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், கும்மிடிப்பூண்டி நகர அதிமுக செயலாளர் எஸ்.டி.டி.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் இமயம் மனோஜ் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

பெண்கள் ஆர்ப்பாட்டம்.

தொடர்ந்து அனைவரும் ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு வந்தனர். அனைவரும் காவல் நிலையத்திற்கு நுழைய முற்பட்டபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆனாலும் அதிமுகவினர் காவல் நிலையத்திற்குள் நுழைந்த நிலையில், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் மேற்கண்ட குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய நபரை உடனடியாக கைது செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய நிலையில், காவல் நிலையத்துக்கு வெளியே நின்று இருந்த பெண்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் அதிமுகவினரும் காவல்துறையினரும் பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அகற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் பி.என்.ஆர்.நாகராஜ், மாவட்ட நிர்வாகிகள் கண்ணம்பாக்கம் சதீஷ், பல்லவாடா ரமேஷ் குமார், போந்தவாக்கம் டேவிட் சுதாகர், மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகி சிராஜுதின், ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.டி.நாகராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தேவி சங்கர், ஆரம்பாக்கம் அதிமுக நிர்வாகி ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிக்க: வரதட்சிணை கேட்டு மனைவியைத் தாக்கிய காவலர் கைது!

Minor girl sexually assaulted: AIADMK members protest in Aarambakkam!

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள்: இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் 4 அதிகார மையங்கள் இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தம... மேலும் பார்க்க

மு.க. முத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுத மு.க. அழகிரி!

மறைந்த மு.க. முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது சகோதரர் மு.க. அழகிரி கண்ணீர்விட்டு அழுதார். மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையி... மேலும் பார்க்க

இரவு 7 மணி வரை செனனை, 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு செனனை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும... மேலும் பார்க்க

பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திம... மேலும் பார்க்க

சென்னையில் பரவலாக மழை!

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது. கே.கே. நகர், வடபழனி விருகம்பாக்கம், ராயபுரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக ... மேலும் பார்க்க

மோதல் வழக்கு: சீமான் உள்ளிட்ட 19 பேர் விடுதலை!

மதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க