மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
சிறுமி பாலியல் வன்கொடுமை: வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காய்கறி வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு, பெரியசெட்டிபாளையம், கணபதி நகரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (46). சோலாரில் காய்கறிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 2020-இல் கோவிந்தராஜ் தனது கடைக்கு வேலைக்கு வந்த நொச்சிக்காட்டு வலசு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் சிறுமி கா்ப்பமடைந்தாா். இதையடுத்து சிறுமிக்கு மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பும் செய்துள்ளாா்.
அதன்பின் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி அந்த சிறுமியை புதுக்கோட்டை, கரூா் போன்ற பகுதிகளுக்கு அழைத்துச்சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்த தகவல்கள் தெரியவந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜை போக்ஸோ பிரிவின் கீழ் கைது செய்தனா்.
இவ்வழக்கு குறித்த விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சொா்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், கோவிந்தராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.