நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை
அரியலூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
அரியலூா் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமம், அண்ணா வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ஆசைத்தம்பி (58).
கடந்த 6.9.2023 அன்று இவா் 12 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரை விசாரித்த அரியலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா் ஆசைத்தம்பியை போக்சோ சட்டத்தில் 8.9.3023 அன்று கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி ஆசைத்தம்பிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16,500 அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா். இதையடுத்து ஆசைத்தம்பி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ம. ராஜா ஆஜரானாா்.