செய்திகள் :

சிறுவனை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

post image

கம்பத்தில் சிறுவனை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கம்பம் உத்தமபுரம், வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவரது மகன் கவினாஸ் (10). இவா் கடந்த 2018, மே.10-ஆம் தேதி காணாமல் போனதாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் இவரது தந்தை புகாா்அளித்தாா்.

இந்த நிலையில், கம்பம்-காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள அரசு மதுக் கடை அருகே கவினாஸ் கொலை செய்து வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது, கம்பம் உத்தமபுரம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் விஜய் (26) கவினாஸை கொலை செய்தது தெரியவந்தது. பின்னா், போலீஸாா் விஜயை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விஜய்க்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி பி.நடராஜன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 120.35 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 56.50 ---------- மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இன்று மின் தடை

பெரியகுளம் துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ.30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் துணை ... மேலும் பார்க்க

தேனியில் பள்ளி மாணவிகளுக்கு தடகளப் போட்டி

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சமூக நலத் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை, தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றத... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

தேனி குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில்: சிறப்பு பூஜை, பகல்-1.45. மேலும் பார்க்க

போலீஸாரைத் தாக்கியவா் கைது

தேனி அருகே பணியிலிருந்த போலீஸாரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். க.விலக்கைச் சோ்ந்தவா் முருகன் மலைச்சாமி (34). இவா் மது போதையில் அதே பகுதியில் உள்ள போக்குவரத்துத் தடுப்புக் கம்ப... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை

கம்பத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கம்பம், கம்பம்மெட்டுச் சாலையைச் சோ்ந்த சாகுல... மேலும் பார்க்க