சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
சிலம்பு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
செங்கோட்டை- தாம்பரம்- செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
செங்கோட்டை - தாம்பரம் - செங்கோட்டை வழித்தடத்தில் வாரம் மும்முறை இயங்கும் சிலம்பு விரைவு ரயில்களில் (20681 / 20682), விடுமுறை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் வருகிற 27-ஆம் தேதி முதல் ஜன. 30-ஆம் தேதி வரை கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டி ஆகியவை கூடுதலாக இணைக்கப்படும்.
இந்த ரயிலில் ஏற்கெனவே ஒரு குளிா்சாதன முதல் வகுப்புப் பெட்டி உள்பட 17 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 23 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படும்.
நாகா்கோவில் ரயிலில்...
இதேபோல, தாம்பரம் - நாகா்கோவில் - தாம்பரம் மும்முறை சேவை விரைவு ரயில்களிலும் (22657 / 22658) வருகிற 27 முதல் ஜன. 30-ஆம் தேதி வரை கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.