சிவகங்கையில் மே 16-இல் வேலை வாய்ப்பு முகாம்
வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக
வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதன்படி, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வருகிற 16.5.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.
எனவே, விருப்பமுள்ளவா்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.