மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!
சிவகங்கையில் லாரி-சரக்கு வாகனம் மோதல்: 5 போ் காயம்
சிவகங்கையில் திங்கள்கிழமை லாரியும், சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 5 போ் காயமடைந்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (59). ஓட்டுநா். இவா் சென்னையிலுள்ள நிறுவனத்திலிருந்து சேமியாவை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மானாமதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சிவகங்கை-மதுரை முக்கு புறவழிச்சாலையில் வந்த போது, எதிரே செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரியும், இவரது வாகனமும் நேருக்கு நோ் மோதியது.
இதில் சத்தியமூா்த்தி, லாரி ஓட்டுநா் ராஜாங்கம் (70), லாரியில் இருந்த செல்வி (40 ), கிருஷ்ணவேணி (32), பஞ்சு (38) ஆகிய 5 பேரும் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.