செய்திகள் :

சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 92 வயது மூதாட்டி!

post image

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 63வது ஆண்டாக முத்தம்மாள்(92) என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி அன்று கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் செய்து சுவாமிக்கு படைக்கும் விஷேச நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

புதன் கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 12 மணிக்கு ஊரணிபட்டியை சேர்ந்த முத்தம்மாள்(90) என்ற மூதாட்டி தொடர்ந்து 63வது ஆண்டாக கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார்.

இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!

நெய்யால் பக்தர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு மூதாட்டி ஆசி வழங்கினார். மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாள்கள் விரதமிருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் செய்தார். 

அந்த அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 27) திறந்து வைத்தார்.இப்புதிய மர... மேலும் பார்க்க

பெருநகர சென்னையின் கடன்தொகை ரூ. 3,065.65 கோடி: மேயர் பிரியா

பெருநகர சென்னையின் கடனுக்காக வட்டி மட்டும் ரூ. 8.5 கோடி செலுத்தப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 28)ல் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்.28 (நாளை) கடலோர தமிழகத்தில் அநேக இடங்க... மேலும் பார்க்க

நான் தலைமறைவாக இல்லை; காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? - சீமான் பேட்டி

நான் தலைமறைவாக இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஓசூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'நான் எங்கும் தலைமறைவாக இல்லை. நான் பயந்து எங்கும் ஓடிவிட மாட்டேன். நான்... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலிவு விலை கஃபேவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்துவைத்தார்.நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உணவகங்களை திறக்க வேண்டும... மேலும் பார்க்க