செய்திகள் :

சீன அரசையே உலுக்கிய பெண்ணியவாதிகளின் கோபம் - ‘சானிட்டரி பேட்’ சர்ச்சையும் பின்புலமும்

post image

சீனாவில் சானிட்டரி நாப்கின் பேட்ஸ் தரத்தில் நிகழ்ந்த மோசடி அந்நாட்டுப் பெண்ணியவாதிகளை பெரும் போராட்டத்தைக் கையிலெடுக்க தூண்டியுள்ளது. இந்த சர்ச்சை கடந்த நவம்பர் முதல் பாதியில் உருவானது. பிரபல ப்ராண்ட் ஒன்று தான் விற்பனை செய்த சானிட்டரி பேட்ஸ்களின் நீளம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக முதல் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்தச் சர்ச்சை எழுந்த சில நாட்களுக்குப் பின்னர் வாடிக்கையாளர்கள் சிலர் சானிட்டரி பேட்களின் pH அளவானது திரைச்சீலை, டேபிள் விரிப்புகளில் இருக்கும் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், அதனால் அந்தப் பேட்களை பயன்படுத்துவோருக்கும் அரிப்பு, எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டதாகவும் கூறினர்.

ஆனால், நுகர்வோரின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து சானிட்டரி பேட் நிறுவனமான ஏபிசி நிறுவனம் மெத்தனமான பதில்களைத் தெரிவித்தது அவர்களைக் கொந்தளிக்கச் செய்தது. ஏபிசி நிறுவனம், “உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் வேறு பிராண்டை வாங்கிக் கொள்ளலாம்” என்று அகங்கார தொனியில் பதிலளித்தது.

இந்தப் பதிலால் எதிர்ப்பலைகள் தீவிரமாக எழ, சீனாவின் பிரபல சானிட்டரி பேட்ஸ் நிறுவனங்கள் பல தங்களின் தரம் குறைந்த பொருட்களுக்காக மன்னிப்பு கேட்டன. ஏன் எகத்தாளமாகப் பேசிய ஏபிசி நிறுவனம் கூட, ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தனது முந்தைய கருத்துக்கு வருந்தியது.

ஆனால், சீனப் பெண்களை இந்த மன்னிப்புகள் சமரசமப்படுத்திவிடவில்லை. சானிட்டரி பேட்ஸின் தரத்தை குறைத்து ஏமாற்றினார்கள் என்பதைவிட பெண்களின் உடல்நலனையும், அவர்களின் மாண்பையும் எவ்வளவு அப்பட்டமாக அலட்சியம் செய்துள்ளனர் என்பதே அவர்களை வெகுண்டெழச் செய்துள்ளது.

2022-ல் சீனப் பெண்கள் சமூக வலைதளம் மூலம் ஒரு முக்கியமான போராட்டத்தை முன்னெடுத்தனர். ரயில்களில் சானிட்டரி பேட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று கோரினர். ஆனால் ரயில்வே நிர்வாகமோ சானிட்டரி பேட்ஸ் என்பது பெண்களின் தனிப்பட்ட நலன் சார்ந்த பொருட்கள். அதனை அவர்கள் நிலவரம் அறிந்து முன்னேற்பாடாக வைத்துக் கொள்ளுதல் அவசியம் என்று கூறி புறக்கணித்தது.

சிலர் ரயில்களில் சானிட்டரி பேட்ஸ் விற்பனை செய்வது என்பது பொருத்தமற்றது என்றும், சுகாதாரக் கேடானது என்றும் கூறினர். அதிலும் ஒரு இணையவாசி, உணவுப் பொருட்களோடு சானிட்டரி பேட்ஸையும் விற்பனை செய்வதை யாராவது விரும்புவார்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுபோன்ற விமர்சனங்கள் சீனாவில் இன்றளவும் மாதவிடாய் ரத்தம் அசுத்தமானது, சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது, அவமானகரமானது போன்ற மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பது போல் இருந்தது.

மேலும், சீன ஆண்கள் மத்தியில் இன்னமும் மாதவிடாய் சம்பந்தமாக சரியான புரிதல் இல்லாமல் இருப்பதை உணர்த்துவது போலவும் இருந்தது. இதனை உறுதிப்படுத்துவது போல் சமூக வலைதளத்தில் ஆண் பயனர் ஒருவர், பெண்கள் ஏன் மாதவிடாய் ரத்தத்தை வெளியேற்றாமல் அடக்கிக் கொள்ளக்கூடாது? என வினவியிருந்தார்.

பெண்களின் அடிப்படைத் தேவைகள் கூட புறக்கணிக்கப்படுவது என்பதில் அரசாங்கமும் ஒரு நகர்வை எடுத்துவைத்தது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியானது சமீபகாலமாக பெண்கள் ஒன்றுக்கும் அதிகமான குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கிறது. சீனாவில் வயதானோர் எண்ணிக்கை அதிகரிப்பதும், வேலை செய்வோரின் எண்ணிக்கை சுருங்கி வருவதுமே அரசு இத்தகைய அழுத்தத்தைத் தரக் காரணமாகும்.

அரசாங்கத்தின் இந்தக் கொள்கை, ஊடகங்களின் வாயிலாகவும் அறிவுறுத்தப்படுகிறது. பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பைவிட குடும்பம், தாய்மைக்கு முக்கியத்துவம் தர வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, பெண்கள் அரசின் அறிவுறுத்தலால் பிள்ளைப் பேறுக்கு தயாராவார்கள் என்று நிறுவனங்களும் அவர்களை வேலைக்கு எடுப்பதை தவிர்க்கின்றன.

பெண்ணியம் பேசும் அமைப்புகள் அடக்குமுறைக்கு உள்ளாகின்றன. ஃபெமினிஸ்ட் வாய்சஸ் என்ற சக்திவாய்ந்த ஊடக தளம் மூடப்பட்டுவிட்டது. #MeToo ஹேஷ்டேகுகளுக்கு அனுமதி இல்லை. இதனால் பெண்ணியவாதிகள், “Rice Bunny” என்ற ஹேஷ்டேகை பயன்படுத்துகின்றன. இதனை சீன மொழியில் உச்சரித்தால் ‘மீ டூ’ என்றே வரும். பாலின சமத்துவத்தைப் பேண பல்வேறு நூதன உத்திகளையும் அவர்கள் பின்பற்றுகின்றனர்.

மாற்றத்துக்கான போராட்டம்:

சீனாவில் உள்ள பெண்கள் இப்போது கையிலெடுத்துள்ள போராட்டம் தரமான சானிட்டரி பேட்களுக்கானது. அரசாங்கத்தின் ஆன்லைன் தளங்கள் வாயிலாகவே அவர்கள் நேரடியாக இந்த முக்கியமான பிரச்சினையை முன்வைக்கின்றனர்.

இதன் விளைவாக கடந்த நவம்பர் 22-ஆம் தேதி, அரசாங்கப் பிரதிநிதி ஒருவர் இந்தப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால், இந்த நடவடிக்கை போதாது என பெண்கள் தெரிவிக்கின்றனர். சானிட்டரி பேட்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களையும் புதிய கொள்கையை வகுப்பதில் சீன அரசு ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய தரங்களின் திருத்தத்தை வடிவமைப்பதில் பெண்களின் தீவிர ஈடுபாடு, அவர்கள் அரசியல் பங்கேற்புக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிவகைகளை பயன்படுத்துவது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், சீனாவில் குறைந்து வரும் இன விருத்தி விகிதங்களை அந்நாட்டு பெண்கள் தரமற்ற சானிட்டரி பேட்களுடன் தொடர்புபடுத்தி விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

1970-களில் சீனாவில் ஒரு குழந்தை கொள்கை வகுக்கப்பட்டபோது, குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதிலிருந்து பெண்கள் சராசரியாக 6 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால், அது இப்போது 2000-ஆம் ஆண்டில் இருந்து 1 ஆக குறைந்துள்ளது.

சீனாவில் குழந்தையின்மை பிரச்சினை மிகவும் அதிகரித்துள்ளது. லேன்செட் மருத்துவ இதழில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில், சீனாவின் குழந்தையின்மை பிரச்சினை 2007-ல் 12 சதவீதமாக இருந்து 2020-ல் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. சீனாவில் 5.6 -ல் 1 தம்பதிக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்கிறது.

அண்மையில் ஏற்பட்ட சானிட்டரி பேட் தர ஊழல் சர்ச்சையிலிருந்து #LowQualitySanitaryPadsCauseFemaleIntertily என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்துள்ளது. சீன அரசு சமூக வலைதளமான வெய்போவில் இந்த ஹேஷ்டேக் பிரபலமாக இருக்கிறது. பெண்களின் தனிப்பட்ட துயரம் இப்போது தேசிய பிரச்சினையோடு இணைந்துவிட்டது. இதனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது அரசாங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாகிவிட்டது.

அத்தகைய அணுகுமுறை ஒருபுறம் பெண்கள் மீதான சமூகத்தின் தவறான பொது புத்தியில் இன்னும் வலுவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அவர்களின் மற்ற கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். சானிட்டரி பேட்ஸின் தரம் இப்போது வெறும் பெண்களின் பிரச்சினை அல்ல அது இப்போது தேசத்தின் அக்கறையாகியுள்ளது.

சானிட்டரி பேட்ஸ்கான போராட்டத்துக்குப் பின்னர் சீனாவில் பெண்ணிய செயல்பாடு முதிர்ச்சியுடன் வளர்ந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர்களின் கோரிக்கைகள் இப்போது பொது மற்றும் கொள்கை களங்களில் அதிகபட்ச தாக்கத்தை உறுதி செய்வதற்கான உத்திகள் என்றளவில் கவனமாக வடிவமைக்கப்படுவதாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

'அயோத்தி ரத யாத்திரை கலவரம்... மோடிக்கு எதிரான வாக்குமூலம்' - பேசுபொருளான சஞ்சீவ் பட்; யார் இவர்?

'போதிய சாட்சியங்கள் இல்லை' என்று 27 ஆண்டுகளுக்கு பிறகு, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், காவல் சித்ரவதை வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தான் தற்போதைய ஹாட் டாப்பிக். க... மேலும் பார்க்க

Syria: சிரியாவிலிருக்கும் ஜவஹர்லால் நேரு தெருவுக்கு என்னவாகும்? இந்தியாவுடனான உறவு நீடிக்குமா?

சிரியா நாட்டில் அசாத் குடும்ப ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.1950 முதல் இந்தியா - சிரியா இடையே ராஜாந்திர உறவுகள் இருந்து ... மேலும் பார்க்க

அனல் பறந்த 'டங்ஸ்டன்' விவகாரம்; ஸ்கோர் செய்தது ஸ்டாலினா...? பழனிசாமியா...?

சர்ச்சையைக் கிளப்பிய டங்ஸ்டன் விவகாரம்!மதுரை அருகில் உள்ள மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு அந்த பகுதி மக்கள் தொடங்கி, சு... மேலும் பார்க்க

`இன்னும் கல்யாணம்கூட ஆகல' கொதிக்கும் ஊழியர்கள்; போராட்டக் களமானதா ராஜரத்தினம் ஸ்டேடியம்?

''நூறு நாள் வேலை கேள்விப் பட்டிருப்பீங்க. ஆறு நாள் வேலை கேள்விப்பட்டிருக்கீங்களா? வாரத்துக்கு ஒன்றரை நாள் வீதம் மாசத்துக்கு ஆறு நாள் தான் வேலை. சம்பளம் 12000 தர்றாங்க.இந்த ஆறு நாள் போக மிச்ச நாளுக்கும... மேலும் பார்க்க

VCK: கொடிக் கம்ப விவகாரம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்; கலெக்டரை குற்றம்சாட்டும் விசிக; பின்னணி என்ன?

அமைச்சர் பி. மூர்த்தியின் தொகுதியில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு45 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்ற அனுமதித்த குற்றச்சாட்டில்வருவாய்த்துறை ஊழியர்கள் மூவர் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள ... மேலும் பார்க்க

வேண்டுமென்றே Parliament-ஐ முடக்கும் BJP - இதுதான் காரணமா?| Annamalai Next Plan? - Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் * உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கடைப்பிடிக்கப்படும் - முதலமைச்சர்* டங்ஸ்டன் சுரங்கம்: முழு பூசனிக்காயைக் கட்... மேலும் பார்க்க