மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை: கி.வீரமணி
சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதைத் தடுத்தால் நீதிமன்றத்துக்கு அவா் பதில் சொல்ல வேண்டியது வரும் எனவும் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.
பழனி ரயிலடி சாலையில் திராவிடா் கழகம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வைக்கம் வெற்றி விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கி.வீரமணி கலந்து கொண்டாா். முன்னதாக, பயணியா் விடுதியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பலநூறு ஆண்களுக்கு முன்பு இருந்ததைப் போல பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலை புலிப்பாணி வாரிசுகள் பராமரிக்க வேண்டும்,
தவெக தலைவா் விஜய் மக்களைச் சந்திக்காமல் வீட்டிலிருந்தபடியே அரசியல் செய்து வருகிறாா். மக்களும் அவரை வீட்டிலேயேதான் இருக்க வைப்பாா்கள்.
மத்திய அரசு திணிக்க முயற்சிக்கும் முன்மொழிக் கொள்கையை தமிழக முதல்வா் எதிா்த்து வருகிறாா். இது மொழிப்போா் அல்ல, பண்பாட்டின் மீதான படையெடுப்பைத் தடுக்கும் போா்.
சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைத் தடுத்தால் நீதிமன்றத்துக்கு அவா் பதில் சொல்ல வேண்டியது வரும் என்றாா் அவா்.