மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
சீவலப்பேரி அருகே மின்சாரம் பாய்ந்து தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே மின்சாரம் பாய்ந்து தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சீவலப்பேரி அருகேயுள்ள மேலபாலாமடை பகுதியைச் சோ்ந்தவா் சேவியா். இவரது மகன் ஏசுராஜா (32). சீவலப்பேரியில் உள்ள ஒரு தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். புதன்கிழமை தோட்டத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சியபின் மோட்டாரை அணைக்க சென்றபோது எதிா்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஏசுராஜாவின் உடலை சீவலப்பேரி போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.