சுரண்டை எஸ்.ஆா்.பள்ளி மாணவா்கள் சாதனை
சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் கலைத் திறன் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.
பாவூா்சத்திரம் எம். எஸ். பி. வி. எல். பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கலைத்திறன் போட்டி நடைபெற்றது.
மின் சுற்று தினத்தை முன்னிட்டு, இளம் பொறியாளா்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், கலந்துகொண்ட சுரண்டை எஸ். ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி ஜூனியா் பிரிவு அணியில் முப்பரிமாண மாதிரி வடிவம், வண்ண பென்சில் ஓவியம், மின்னணுக் கருவிக் கழிவுகளில் கலை நயம், ஆங்கிலக் கட்டுரை ஆகியவற்றில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா்.
மேலும், ஜூனியா் பிரிவு ஆங்கிலக் கட்டுரையில் இரண்டாமிடமும் பெற்றனா்.
சீனியா் பிரிவு அணியினா், அறிவியல் கண்காட்சி போட்டியில் சுவரொட்டி தயாரித்தல், கருமை நிற பென்சில் ஓவியம், மின்னணுக் கருவிக் கழிவுகளில் கலை நயம், ஆங்கிலக் கட்டுரை ஆகியவற்றில் முதலிடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற எஸ். ஆா். பள்ளி அணியினருக்கு தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல். ரெஜினா சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினாா்.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி முதல்வா்கள் பொன் மனோன்யா, புஷ்பா மற்றும் தலைமை ஆசிரியா் மாரிக்கனி ஆகியோா் பாராட்டினா்.