செய்திகள் :

``சூரசம்ஹாரத்தை அனிமேஷன் படமாக எடுத்தால் என்ன?" - ரசிகரின் கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில்

post image

ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு திரையுலகின் மாயாஜாலம் வேறுவிதமாக மாறிவிட்டது. சமீபமாக வெளியாகும் அனிமேஷன் படங்களும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது.

இந்தியாவில் மஹாவதார் நரசிம்மா (Mahavatar Narsimha) என்ற அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

இதுவரை அதிக வசூல் செய்த முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து, இந்திய அளவில் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்தது.

Mahavatar Narsimha
Mahavatar Narsimha

இதன் மொத்த வசூல் ரூ.250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியப் புராணக் கதையான நரசிம்மரின் அவதாரத்தைப் பற்றிய 3D அனிமேஷன் திரைப்படம்.

இதன் பிரமாண்டமான கதை சொல்லல் மற்றும் உயர் தர அனிமேஷன், திரைத்துறையின் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், 2014-லேயே உயர்-வரையறை ஃபோட்டோரியலிஸ்டிக் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாக்கப்பட்ட கோச்சடையான் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

இதுதான் இந்தியாவின் முதல் ஃபோட்டோரியலிஸ்டிக் மோஷன் கேப்சர் திரைப்படமாகும் (India's first photorealistic motion capture film). இந்தப் படத்தை இயக்கியர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

எனவே, சமூக ஊடகத்தில் ஒரு ரசிகர் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்தை டேக் செய்து, ``தமிழில் முருகனின் சூரசம்ஹாரம் குறித்து ஒரு அனிமேஷன் படம் எடுத்தால் என்ன?

அது ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் போன்ற தயாரிப்பு ஜாம்பவான்கள் இதை முயற்சிக்கலாம்!

சௌந்தர்யா ரஜினிகாந்த்
சௌந்தர்யா ரஜினிகாந்த்

மகாஅவதார் நரசிம்மா படமே இவ்வளவு பணம் வசூலிக்கிறது என்றால், முருகனின் கதைக்கும் அந்த ஆற்றல் உள்ளது!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த், ``நீங்கள் சொல்வது மிகவும் உண்மை! அனிமேஷனுக்கு அதற்கான அங்கீகாரம் இறுதியாகக் கிடைத்துவிட்டது.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று நான் உறுதியாக நம்புகிறேன். இறையருளால், இன்னும் பல அற்புதமான திரைப்படங்கள் வரவிருக்கின்றன! வெற்றி வேல்! வீர வேல்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vaaheesan: "மத ரீதியான பாட்டு பண்ணாதன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுனாங்க" - வாகீசன் பேட்டி

வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகி... மேலும் பார்க்க

``என் முதுகில் குத்திக் குத்தி காயம், ரத்தம்'' - மேடையில் கலங்கி அழுத நடிகர் ஆனந்த் ராஜ்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: தேவதாஸாக நடிகர் லோகேஷ் கனகராஜ்; ஹீரோயினாக வமிகா கேபி - எப்போது ரிலீஸ்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரமெடுத்துள்ளார்.லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல்களிலேயே, அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்த... மேலும் பார்க்க

``படம் எடுத்த பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்'னு நினைச்சேன்'' - திருமணம் குறித்து அபிஷன் ஜீவிந்த்

`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.அப்படத்தின் வெற்றியைத்... மேலும் பார்க்க

மாரி செல்வராஜ்: ``தமிழிலும் அர்ப்பணிப்புள்ள நடிகர்கள் இருக்கிறோம்'' - நடிகை ஆராத்யா விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்... மேலும் பார்க்க

Ajith: "F1 படத்தில் Brad Pittடிடம் கேட்கும் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்" - அஜித்தின் பதில் என்ன?

நடிகர் அஜித் குமார், இப்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். 'அஜித் குமார் ரேஸிங்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச்... மேலும் பார்க்க