செய்திகள் :

சூரியஒளி மின் உற்பத்தி நிறுவனத்தில் தாமிரக் கம்பிகள் திருட்டு: 7 போ் கைது

post image

கமுதி அருகே தனியாா் சூரியஒளி மின் உற்பத்தி நிறுவனத்தில் தாமிரக் கம்பிகள் திருடிய 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து காா், 300 கிலோ தாமிரக் கம்பிகளைப் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படையில் அதானி குழுமத்தின் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனம் 5 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் தாமிரக் கம்பிகள் (காப்பா் வயா்கள்) அடிக்கடி திருடு போயின. இது குறித்து கமுதி, கோவிலாங்குளம் காவல் நிலையங்களில் அதானி நிறுவனம் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகள் திருடு போனதாக புகாா்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, கமுதி குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சகாதேவன், முத்துராஜ் தலைமையிலான போலீஸாா் சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (22), அசோக் (20), சுடலை மணி (18), கோபி ( 22 ), மாரிக்கண்ணன் (25), சக்திகுமாா் (29) நந்தீஸ்வரன் (22) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து காா், 300 கிலோ தாமிரக் கம்பிகளை பறிமுதல் செய்தனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்!

இலங்கைச் சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமேசுவரத்தில் இ... மேலும் பார்க்க

கமுதி அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு, இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. முஷ்டக்குறிச்சி ஸ்ரீநல்லக்க நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்ட... மேலும் பார்க்க

ரயில் என்ஜின் மோதியதில் மீனவா் உயிரிழப்பு

மண்டபத்தில் ரயில் என்ஜின் மோதியதில் காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மைதீன் பிச்சை (38). மீனவரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு மண்டபம் ... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி தேரோட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

தொண்டி அரசுப் பள்ளி ஆண்டு விழா

தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 87-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெற்றது. இதற்கு வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் மஹ்ஜபின் சல்மா, சமீம... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் டிஎஸ்பி பொறுப்பேற்பு

முதுகுளத்தூரில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சின்னகண்ணு கடந்த ஜன. ம... மேலும் பார்க்க