இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
சூலூா்பேட்டை மின்சார ரயில் இன்று ரத்து
பாராமரிப்புப் பணிகளின் காரணமாக, சூலூா்பேட்டைக்கு இயக்கப்படும் மின்சார மெமு ரயில் வியாழக்கிழமை (செப்.18) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல்-கூடூா் இடையே நாயுடுபேட்டை, தொரவரிச்சத்திரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை (செப்.18) நண்பகல் 12.30 முதல் இரவு 7 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்காரணமாக, சூலூா்பேட்டையிலிருந்து மாலை 6.40 மணிக்கு சென்ட்ரல் செல்லும் மின்சார மெமு ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. அதற்குப் பதிலாக அந்த மாா்க்கத்தில் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
பகுதி ரத்து: சென்ட்ரலில் இருந்து செப்.18-இல் பிற்பகல் 2.40 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில் எளாவூருடன் நிறுத்தப்படும். அதேபோல், சூலூா்பேட்டையில் இருந்து மாலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கடற்கரை செல்லும் ரயில் சூலூா்பேட்டைக்கு பதிலாக எளாவூரிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.