செய்திகள் :

"சூழ்நிலைக் கட்டாயத்திற்காக உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது! - ஐஸ்வர்யா ராய் அறிவுரை!

post image

79-வது கான் திரைப்பட விழா நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. லோரியல் பாரிஸ் பிராண்டின் அம்பாசிடராகப் கான் திரைப்பட விழாவில் பல வருடங்களாக தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

இந்தாண்டும் அவருடைய தனித்துவமான காஸ்டியூமில் கலந்துகொண்டிருக்கிறார்.

Aishwarya Rai|நடிகை ஐஸ்வர்யா ராய்
Aishwarya Rai|நடிகை ஐஸ்வர்யா ராய்

அங்கு ஊடகத்தினரிடம் பேசிய ஐஸ்வர்யா ராய் திரைத்துறைக்கு வர விரும்பும் புதிய தலைமுறையினருக்குச் சில வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார்.

அவர், "சினிமாவுக்குள் நுழையும் புதியவர்கள், முதலில் தங்களுக்குள் இருக்கும் உண்மையான ஆர்வம் எது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும்.

ஏனெனில், உங்களது அந்த ஆர்வம்தான் கடினமான சூழ்நிலைகளிலும் உங்களை முன்னோக்கிச் செல்ல உதவும் அடித்தளமாகும். கலைத்துறையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் உங்களுடைய சொந்த விருப்பமாக இருக்க வேண்டும்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

பிறருக்காகவோ அல்லது சூழ்நிலைக் கட்டாயத்திற்காகவோ உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது.

நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அந்தத் தேர்வுகளுக்கு இறுதிவரை நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்புதான் உங்களுக்கான தனி அடையாளத்தை இந்தத் துறையில் பெற்றுத் தரும்" எனப் பேசியிருக்கிறார்.

பரோலில் வெளியே வந்து தப்பித்த கொலைக் குற்றவாளி; 12 ஆண்டுகள் பாலிவுட் நடிகராக வலம்; சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலத்தில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவர் ஹேமந்த் நகின் தாஸ். 2005 ஆண்டு நடந்த கொலை ஒன்றில் ஹேமந்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர் மகாசனா சிறையில் தண்டனை அனு... மேலும் பார்க்க

"எதிர்பாராத விதங்களில் வாழ்க்கையில் பயணிக்கும் கதை!" - நடிகராகும் ராஜ்குமார் ஹிரானியின் மகன்

பல கல்ட் கிளாசிக் பாலிவுட் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி தற்போது “ப்ரீதம் அண்ட் பெட்ரோ” என்ற இணையத்தொடரை தயாரித்துள்ளார். இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத... மேலும் பார்க்க

"இறந்தாலும் எங்களுடன்தான் இருக்கவேண்டும்" - புதைத்த நாயை நள்ளிரவில் தோண்டி எடுத்து வந்த ஷாருக்கான்

பாலிவுட் நடிகர்கள் அனைவருமே நாய்கள் மீது அதிக பாசம் வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு நடிகரும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்களை வைத்திருக்கின்றனர். நடிகர் ஷாருக்கானிடம் முதலில் 4 நாய்கள் இருந்தன. அவற்றின் மீத... மேலும் பார்க்க

"உயரத்தால் பட வாய்ப்புகளை இழந்தேன்; ஆனால் சல்மான் கான் மட்டுமே..." - 'ஆசை' பட நடிகை பூஜா பத்ரா

உத்தரப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பூஜா பத்ரா, அஜித் நடித்த ஆசை படத்தில் படத்தில்தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் ப... மேலும் பார்க்க

Cannes 2026: இரண்டாவது முறையாக ஆலியா பட்; ஆனால், கண்டுகொள்ளாத போட்டோகிராபர்ஸ்! - வைரலாகும் வீடியோ

பிரான்ஸில், 79-வது கான் திரைப்பட விழா நேற்றைய தினம் தொடங்கியது. பாலிவுட் நடிகை ஆலியா பட் இரண்டாவது முறையாக, இந்தாண்டும் கான் திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்த... மேலும் பார்க்க

"படம் ஹிட் ஆகும் என நம்பிக்கையாக இருந்தோம்; ஆனால், ஓடாததற்கு..." - ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான்!

ஆமிர் கானின் மகனான ஜூனைத் கான் நடித்திருந்த 'ஏக் தின்' திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதான் சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகம... மேலும் பார்க்க