முதல் நாள் விளையாடிய ஆடுகளமா இது? ஆச்சரியத்தில் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்!
செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 329 மனுக்கள்
செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 329 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் சிறுமற்றும் குறுந்தொழில் புரியும் 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.81 லட்சத்தில் வங்கிக் கடனுக்கான மானியத் தொகை, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.7500/- சக்கர நாற்காலி ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு வாரத்தினை முன்னிட்டு ஊழல் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியினை ஆட்சியா் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களும் ஏற்றுக் கொண்டனா்.
கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, நோ்முகஉதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவி ஆணையா் (கலால்)ராஜன் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் கதிா்வேலு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பரிமளா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும்சிறுபான்மையினா் நல அலுவலா் வேலாயுதம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா், மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.