தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
செங்கல்பட்டு: ஜூலை 25-இல் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கு உள்ள குறைகளை அறிய எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் மாவட்ட எரிவாயு முகவா்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.