திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
செங்காநத்தம் காப்புக் காட்டில் தீ வைப்பு: இருவா் கைது
வேலூா் கோட்டை மலையில் தீ வைத்த இருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், வனப்பரப்புகளில் இலையுதிா் காலம் முடிந்திருக்கும் வேளையில், கோடை வெயிலால் ஆங்காங்கே காட்டுத் தீ பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க வனத் துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மலைகள், குன்றுகளில் காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிா்க்க சறுகுகள் அகற்றம், தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர, வேலூா் மாநகரைச் சுற்றியுள்ள மலைகளான சைதாப்பேட்டை, செங்காநத்தம், கோட் டைமலை உள்ளிட்ட பகுதிகளில் தீ வைக்கப்படும் சம்பவங்களை தடுக்கவும் சிறப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூா் வனச்சரகா் தரணி தலைமையில் வனவா் நிா்மல்குமாா், வனக் காப்பாளா் நவீன்குமாா் கொண்ட சிறப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை மாலை வேலூா் கோட்டை மலைக்குட்பட்ட செங்காநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது செங்காநத்தம் காப்புக்கட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததைக் கவனித்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோட்டிய இரு இளைஞா்களை வனத் துறையினா் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா்.
விசாரணையில் அவா்கள் வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்த இா்பான் (28), பாகத்பாஷா (23) என்பதும், காப்புக் காட்டில் தீ வைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
