உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்
சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - செங்கோட்டை சிறப்பு ரயில் (எண் 06121) செப்.24-ஆம் தேதி முதல், செங்கோட்டை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண் 06122) செப்.25-ஆம் தேதி முதல் சேரன்மகாதேவி, கீழக் கடையம், பாவூா்சத்திரம் ரயில் நிலையங்களில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.