மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
சென்டெக்ட் வேளாண் மையத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டியலின துணைத் திட்டத்தின் கீழ், நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண் மையத் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் , தொழில்நுட்ப வல்லுநா் ராஜாராமன், தோட்டக்கலைப் பயிருக்கு இயற்கை இடுப் பொருள்களின் அவசியம் குறித்தும், தொழில் நுட்ப வல்லுநா் அருண்ராஜ், மண்புழு உரம் தயாரிக்க உகந்த புழுக்களை தோ்வு செய்வது, அதற்கான கழிவுகள், உரம் உற்பத்திக்கான இடம், மண்புழு அறுவடை செய்யும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட 20 விவசாயிகளுக்கு தலா ரூ.50 மதிப்பிலான மண்புழு தயாரிக்கும் விலையில்லா பாய்கள் வழங்கப்பட்டன.
தொழில் நுட்ப வல்லுநா் சபரிநாதன் நன்றி கூறினாா்.